படப்பிடிப்பில் சோகம்.. சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு

1பார்த்தது
படப்பிடிப்பில் சோகம்.. சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு
சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் நடைபெற்ற எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை படமாக்குவதற்காக சிலிண்டரில் வாயு நிரப்பியபோது எதிர்பாராத விதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி