பிறந்தநாள் அன்று நடந்த சோகம்.. மாணவர் பலி

66பார்த்தது
பிறந்தநாள் அன்று நடந்த சோகம்.. மாணவர் பலி
அரியலூர் மாவட்டம் கொம்மேடு செல்லும் பாதையில் உள்ள பிள்ளை ஏரியில், குளித்துக் கொண்டிருந்த மாணவர் உயிரிழந்தார். 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் நகுலன், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக நகுலன் நீரில் மூழ்கினார். இதனையறிந்த தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கி மாயமான நகுலனை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.