கூடைப்பந்து கம்பம் சரிந்து 2 வீரர்கள் உயிரிழந்த சோகம்!

7பார்த்தது
ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் கூடைப்பந்து கம்பம் சரிந்து மார்பின் மீது விழுந்ததில் தேசிய வீரர் ஹர்திக் (16) என்பவர் உயிரிழந்தார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹர்திக், கம்பத்தில் தொங்க முயன்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று பகதூர்கர் என்ற இடத்தில் இதேபோன்ற விபத்தில் அமன் என்ற வீரரும் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து இரண்டு வீரர்கள் உயிரிழந்ததால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: இந்தியா டுடே