தண்டவாளத்தில் கடந்த முதியவர் மீது ரயில் மோதி பலி

3384பார்த்தது
தண்டவாளத்தில் கடந்த முதியவர் மீது ரயில் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே தேமான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர் கடந்த 31ஆம் தேதி வயல் வேலைக்குச் செல்லும்போது நாசரேத்-ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி