வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று (பிப்.21) முதல் தொடங்கியுள்ளது.