தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் 2 ஆம் கட்ட பரப்புரை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தவெக-வில் மக்கள் பாதுகாப்புப் படை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பிரிவில் இடம் பெற்றுள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் பனையூரில் நேற்று (நவ.2) நடந்தது. விஜய் கூட்டத்துக்கு வரும் மக்களை ஒழுங்குப்படுத்தும் வகையில், ‘மக்கள் பாதுகாப்பு படை’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.