தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள தடா, சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் ரயிலும், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.