பனிமூட்டம் காரணமாக கர்நாடகாவில் இருந்து வரும் மங்களூர் விரைவு ரயில், அசோகபுரம் காவிரி விரைவு ரயில் காலதாமதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரல் வரவேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் 15 நிமிடம் காலதாமதமாக வந்து சேர்க்கின்றன. அரக்கோணம்-சென்னை கடற்கரை, திருவள்ளூர்-பொன்னேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களும் தாமதமானதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.