செங்கல்பட்டைச் சேர்ந்த திருநங்கை வக்கீல் சத்யஸ்ரீ சர்மிளா, ஆவணி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை செல்ல முயன்றபோது பம்பையில் போலீசார் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இது மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன் இருமுறை சபரிமலை தரிசனம் செய்துள்ளதாகவும், தற்போது திருநங்கை என கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருநங்கைகள் சபரிமலை செல்ல உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.