மாணவிகள் கீழே விழுந்த விவகாரம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

0பார்த்தது
புதுக்கோட்டையில் பழங்குடியின மாணவிகளை அரசு பேருந்தில் ஏற்ற சக பயணிகள் மற்றும் நடத்துனர் மறுத்ததோடு, கூட்டமாக இருந்ததால் கதவை திறந்து அவர்களை கீழே தள்ளிவிட்டதாக கூறி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இச்சம்பவத்தில், பேருந்து ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பேருந்தில் இருந்த பயணி ஒருவர் அவசரகால பொத்தானை அழுத்தியதாலேயே கதவு திறந்ததாக  போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நன்றி:PT

தொடர்புடைய செய்தி