திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி?

8பார்த்தது
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி?
முதலமைச்சர் விஜய், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அவர் வெற்றிப் பெற்ற நிலையில், திருச்சி கிழக்கில் அவர் ராஜினாமா செய்தார். அதன் பேரில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், திருச்சி அரசியலின் மூத்த தலைவருமான கு. பா. கிருஷ்ணனின் மகன் க.சிரஞ்சீவியை விஜய், மேடையில் ஏற்றியுள்ளார். இதனால் வேட்பாளராக அவரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி