மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதிக்கு மே 21-ல் மறுதேர்தல் நடக்கவுள்ள நிலையில், திரிணாமுல்
காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் திடீரென விலகியுள்ளார். இது அவரது சொந்த முடிவு எனத் தெரிவித்துள்ள அக்கட்சி, ஃபால்டாவில் 100-க்கும் மேற்பட்ட தங்களது தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த
அரசியல் நெருக்கடியால் அவர் விலகியிருக்கலாம் என டிஎம்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.