அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் நடைபெற உள்ள கவர்னர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடுகிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது முழு ஆதரவை அறிவித்துள்ளார். டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவேக் ராமசாமி இளமையானவர், வலிமையானவர், புத்திசாலி மற்றும் நாட்டை நேசிப்பவர் என்று பாராட்டியுள்ளார். விவேக் ராமசாமி டிரம்ப்பின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.