அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த BBC பனோரமா ஆவணப்படம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தால், BBC இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இந்த ராஜினாமா முடிவுகள் உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.