டிரம்ப் ஒரு சர்வாதிகாரி தான்: நியூயார்க் மேயர்

95பார்த்தது
டிரம்ப் ஒரு சர்வாதிகாரி தான்: நியூயார்க் மேயர்
டிரம்ப்பை சந்தித்து பேசிய பின்னரும், அவர் ஒரு சர்வாதிகாரி தான் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார். NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், டிரம்ப் ஒரு சர்வாதிகாரி என்பதில் மாற்று கருத்து இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், டிரம்ப்பை ஒரு நியூயார்க் மேயராகத்தான் சந்தித்ததாகவும், அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க வெள்ளை மாளிகைக்கு செல்லவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.