இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு முடிவடைந்த நிலையில், தென்ஆப்பிரிக்கா அடுத்த ஓராண்டுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. வரும் நவ., 22, 23ஆம் தேதிகளில் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இது ஆப்பிரிக்க மண்ணில் நடக்கும் முதல் ஜி20 உச்சிமாநாடு ஆகும். இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா ஜி20 கூட்டமைப்பில் கூட இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.