விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் கொண்டு செல்லும் லாரிகளுக்கான உரிமம் பெற்று தருவதாக கூறி, மதுவிலக்குத்துறை அமைச்சர் பெயரில் ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக தவெக நிர்வாகிகள் கார்த்திகேயன், சதீஷ்குமார் கைது செய்யப்பட்டனர். லாரி உரிமையாளர் சவுந்தரராஜனிடம் பணம் பெற்றுக்கொண்ட இவர்கள், அமைச்சர், அதிகாரிகளுக்கு பணம் தர வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் விக்னேஷ் குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்ததை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.