கேரளாவில் திரிச்சூரில் இருந்து வல்லத்தோல் நகர் சென்ற விரைவு ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு டிக்கெட் பரிசோதகர் சிஜு (47) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் பேரில், ரயில் ஷோரனூர் நிலையத்தை அடைந்ததும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிஜுவைக் கைது செய்தனர். திருவனந்தபுரம் கோட்ட டிக்கெட் பரிசோதகரான அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.