சசிகலாவை சந்தித்த நிர்வாகியை நீக்கிய டிடிவி தினகரன்

8053பார்த்தது
சசிகலாவை சந்தித்த நிர்வாகியை நீக்கிய டிடிவி தினகரன்
சசிகலாவை சந்தித்த நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று (பிப்., 06) அறிக்கை வெளியிட்டுள்ள அவர், 'அமமுக மாணவியர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்' என குறிப்பிட்டுள்ளார்.