தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓபிஎஸ், விஜய்யுடன் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய், பின்னர் ஓபிஎஸ் உடன் போனில் நீண்ட நேரம் பேசியதாக தெரிகிறது. ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆகியோர் விஜய்யுடன் இணைந்தால் அவர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எண்ணுகின்றனர். இதன் காரணமாக விஜய்க்கு அவர்கள் கொக்கி போட்டுக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.