2026 சட்டமன்றத் தேர்தலில் TVK vs DMK என்கிற நேரடிப் போட்டியை நிலைநிறுத்தி, வாகை சூடுவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுவில் பேசிய அவர், நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இவ்வளவு நாள் இருந்தோம். நாம் அமைதியாக இருந்த நேரத்தில் அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. இந்தியாவில் யாருக்கும் இல்லாத கட்டுப்பாடுகள் எங்களுக்கு அதிகமாக விதிக்கப்பட்டது. இடையூறுகள் தாற்காலிகமானதுதான், பயணத்தில் தடம் மாறமாட்டோம் என்றார்.