ரஷ்யாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கம்சாட்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். உயிர்ச் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.