ஆந்திர மாநிலம் ஆலகட்ட அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு 33 பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து இன்று (நவ., 23) அதிகாலை விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் சிக்கிய படுகாயமடைந்த 8 பேரில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.