சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில், பராமரிப்பு பணியின் போது எதிர்பாராதவிதமாக அரவை இயந்திரத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாகினர். உயிரிழந்தவர்கள் மோகனசுந்தரம் (35) மற்றும் பொன்னழகு (59) என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.