பெங்களூருவில் இருந்து சென்னை புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த அவசரமான மீட்பு நடவடிக்கையின் போது எதிர்பாராதவிதமாக இரண்டு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து புகைக்கான காரணத்தை கண்டறிந்து வருகின்றனர்.