உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. 10 சுற்றுகள் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் மற்றும் பொதும்பு பிரபாகரன் இருவரும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தனர். சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. கார் பரிசு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதில், பொந்துகம்பட்டி அஜித் கார் பரிசை வென்றார்.