திருப்பத்தூர் மாவட்டம் ராமச்சந்திராபுரம் அருகே தனியார் பள்ளி பேருந்தை மதுபோதையில் சேதப்படுத்தியதாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சாலையில் சென்ற பேருந்தை நிறுத்தி தகராறு செய்த இருவர், பேருந்தை சேதப்படுத்தியுள்ளனர். இதனால், பேருந்தில் இருந்த மாணவர்கள் அலறியடித்தனர். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் போதையில் தகராறு செய்த இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர்.