கன்னியாகுமரி மாவட்டம் ஆனக்குழி பகுதியில், சாலையின் வலதுபுறமாக திரும்ப முயன்ற இருசக்கர வாகனம் மீது, அதிவேகத்தில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.