தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வர் உதயநிதி

4695பார்த்தது
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வர் உதயநிதி
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2009-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதல் முறையாக துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன் பிறகு அதிமுக ஆட்சியில் இபிஎஸ் முதல்வரான நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வர் பதவி வகித்தார். தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதல்வராக நேற்று(செப்.29) பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி