தவெக ஆட்சியை வீழ்த்துவதற்கு உதயநிதி
ஸ்டாலின் தீவிர முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, பாரதிய ஜனதா கட்சியின் மறைமுக உதவியோடு ஆட்சியைக் கவிழ்க்க அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.