தன் அருகில் அமர்ந்திருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு உடல் நிலை சரியில்லை என்ன குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார். சட்டப்பேரவையில் இன்று பாம்புகடி மருத்துவ சிகிச்சை தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது கே.என்.நேருவுக்கு ஜலதோஷம் உள்ளது, வேறு எந்த தோஷமும் இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டும்.." என உதயநிதியை பார்த்து சொன்னதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.