திருச்சி மாவட்டம் லால்குடி நகரில் ரூ.31.89 கோடியில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் ரூ.4.69 கோடியில் கட்டப்பட்ட புதிய நகராட்சி அலுவலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டிய இந்த பேருந்து நிலையத்தில் 40 பேருந்து நிறுத்தங்கள், 120 கடைகள், 2 ஓட்டல்கள், 2 ஏடிஎம் மையங்கள், டிரைவர்கள் தங்குமிடம், 62 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி இந்த புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.