டெல்லியில் இன்று (அக்.10) நடைபெற்ற போராட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மக்களின் அமைதியான முறையில் போராடும் உரிமையை இந்திய அரசு மதிக்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளது. மேலும், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.