மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் தேவை: ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

16பார்த்தது
மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் தேவை: ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சட்டங்களை மதித்து வன்முறையை கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் தற்போதைய சூழல் மேலும் மோசமடைந்து சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்புவதே இப்பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு ஒரே வழி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.