ஒப்புதல் வழங்கிய ஒன்றிய அமைச்சரவை

66பார்த்தது
ஒப்புதல் வழங்கிய ஒன்றிய அமைச்சரவை
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூலை 16) ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.24 ஆயிரம் கோடியில், 'தன்-தானிய கிரிஷி யோஜனா' திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் 2025-26 முதல் 6 ஆண்டுகள் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக, 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இத்திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி