தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்.19) மொடக்குறிச்சி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தி பாஜாக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் கீர்த்திகா சிவகுமார் மற்றும் மயிலாப்பூரில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரை ஆதரித்து அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.