ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கத்தார் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார். மேற்கு ஆசிய மோதலால் ஆபத்துக்குள்ளாகியுள்ள இந்தியாவிற்கான எரிசக்தி விநியோகங்களைப் பாதுகாப்பது குறித்து கத்தார் எரிசக்தித் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.