டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆன்லைனில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீனாவில் தயாரிக்கப்பட்ட 'யுனிட்ரீ கோ2' என்ற ரோபோ நாயை தாங்கள் தயாரித்ததாக கூறி ஏ.ஐ. மாநாட்டில் காட்சிப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த மாணவர்கள் உடனடியாக கண்காட்சியில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது.