கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அடுத்த முதல்வராகப் போகிறார் என்று செய்திகள் உலாவுகிறதே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதனால் கடுப்பான கர்நாடக முதல்வர் சித்தராமையா, "இதுபோன்ற கருத்துகள் குறித்து நான் பதிலளிக்க மாட்டேன். இது தேவையில்லாத விவாதம். நவம்பர் புரட்சி என்ற பிரச்னையை ஊடகங்கள்தான் உருவாக்கின. மக்கள் விருப்பப்படி, காங்கிரஸ் கட்சி ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும்" என கூறினார்.