சவுதி - ஏமன்
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏவுகணை தாக்குதல்களால் வான்வெளி மூடப்பட்டு விமான
போக்குவரத்து முடங்கும் அபாயம் உள்ளதால் வளைகுடா நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஈரான் ஆதரவு அமைப்புகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் சவுதி, துபாய் உள்ளிட்ட 11 நாடுகளில் தங்கியுள்ள அமெரிக்கர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.