CNN, MS NOW மற்றும் Politico உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அமெரிக்க நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த அடாவடி ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு அதிபர் டிரம்பின் ஊடக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.