அமெரிக்க அரசின் செலவின மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் விமான நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, பலர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். நிதி ஒதுக்கீடு இல்லாததால், 40 நகரங்களில் 10 சதவீத விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாள் ஒன்றுக்கு 1,800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 2 லட்சத்து 68 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.