கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் மெலிஸ்சா புயலால் கியூபா கடுமையாக பாதிக்கப்பட்டது. 150 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை சந்தித்த கியூபாவிற்கு, இந்தியா மருத்துவ உதவி மற்றும் 20 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியது. இந்நிலையில், முதன்முறையாக அமெரிக்கா கியூபாவிற்கு ரூ.27 கோடி மதிப்பிலான அவசரகால நிவாரண உதவியை வழங்க உள்ளது. கியூபா மக்களுக்கு நேரடியாக உதவிகள் சென்றடையும் என்றும், சட்டவிரோத அரசுக்கு அல்ல என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ தெரிவித்துள்ளார்.