இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 180 கடற்படை வீரர்களுடன் சென்ற கப்பலில் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அவசர அழைப்பை அடுத்து இலங்கை கடற்படையினர் உதவி செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் போர்க் கப்பல் கடலில் மூழ்கி வருவதாகக் கூறப்படுகிறது.