பெண்கள் தங்கள் உதடுகளுக்கு லிப்ஸ்டி போடும்போது, அது நீண்ட நேரம் நீடிக்கவும், உதடுகள் பளபளப்பாக இருக்கவும் சில எளிய அழகு குறிப்புகளை பின்பற்றலாம். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு, உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க, கட்டாயம் லிப் பாம் பயன்படுத்த வேண்டும். இது உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, லிப்ஸ்டிக்கை சமமாக படிய செய்யும். மேலும், லிப் பாம் போட்ட பின், ஒரு சில நிமிடங்கள் கழித்து, உதடுகளை லேசாக மாய்ஸ்ச்சரைசர் கொண்ட டிஸ்யூவால் துடைத்துவிட்டு லிப்ஸ்டிக் போடுவது, அதன் நீடித்த தன்மை அதிகரிக்கும்.