திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இன்று (மே 18) நடைபெற்ற விழாவில், கேரளாவின் புதிய முதலமைச்சராக
காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி. சதீசன் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
காங்கிரஸ் தலைமையிலான UDF அமைத்துள்ள இந்த புதிய ஆட்சியின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ஏராளமான தேசிய தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.