அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை நேற்று (நவ., 04) ராஜினாமா செய்தார். ஏற்கனவே வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி, சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மறைவால் தற்போது சட்டப்பேரவையில் 3 இடங்களில் காலியாகவுள்ளன. வரும் 2026 ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது.