தமிழ்நாடு அரசு 2018ம் ஆண்டுக்கான விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிறந்த படத்திற்கான விருதை 'பரியேரும்பெருமாள்' படம் வென்றுள்ளது. அதே போல வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' படம் 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட 7 விருதுகளை 'வடசென்னை' படம் வென்றுள்ளது.