ஸ்ரீனி இயக்கத்தில் நடிகர் வைபவ் மற்றும் வியானா நடிப்பில் உருவாகி வரும் 'மாறுவேஷம்' திரைப்படத்தின் 'கருப்பு ஆடு' என்ற பாடல் தற்போது வெளியானது. ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ள இப்பாடலை மோகன் ராஜன் மற்றும் சாய் ஜகாஸ் வரிகளில் மார்க் ஆண்டனி தாமஸ், சாய் ஜகாஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ராம்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்
விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.