வைகாசி அமாவாசை: ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம்

3083பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (மே 16) ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நள்ளிரவு முதல் பக்தர்கள் வரத் தொடங்கினர். அதிகாலையில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி